தமிழகம்

சென்னையில் 4 மண்டலங்களில் கரோனா தடுப்பு அதிகாரிகள் மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியின் 4 மண்டலங்களில் கரோனா தடுப்பு கள ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளி யிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

12-வது மண்டலத்துக்கு நியமிக்கப்பட்டிருந்த அருங்காட் சியக ஆணையர் எம்.எஸ்.சண்முகம் மாற்றப்பட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநர்எல்.நிர்மல் ராஜ் நியமிக்கப்பட் டுள்ளார்.

14-வது மண்டலத்துக்கு தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மையத்தின் செயல் இயக்குநர்எஸ்.அனீஷ் சேகரும், 15-வதுமண்டலத்துக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத் துறை செயல்இயக்குநர் வி.விஷ்ணுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டலம் 5-ல் சென்னை நகர போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பு திட்ட சிறப்புடிஆர்ஓ ஜெ.பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர சென்னை டாஸ்மாக்பொது மேலாளர் ஆர்.சுகுமார்,சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும வெளிவட்ட சாலை திட்ட நில எடுப்பு டிஆர்ஓ சி.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் ஆகியோர் சென்னையில் கரோனா தடுப்புதிட்டங்களுக்காக சிறப்பு பணி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையரின் உத்தரவுகள்படி செயல்படுவார்கள்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT