திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான சுப்பு லட்சுமி ஜெகதீசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் அவர் நேற்று தாக்கல் செய்துள்ள மனுவில், “திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற் கொலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின் றன. அத்துடன் போலீஸ் உயர் அதிகாரிகளின் துன்புறுத்தல் காரணமாகவே அவர் தற் கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று அவரது தோழி தெரி வித்திருக்கிறார். கோகுல்ராஜ் வழக்கு விசாரணை குறித்து உயர் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால்தான் விஷ்ணு பிரியா இந்த முடிவை எடுத் துள்ளார் என்று தெரிகிறது. எனவே, இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (செப். 23) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.