தமிழகம்

சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: மாவட்ட எல்லைகளில் போலீஸார் தீவிர சோதனை

செய்திப்பிரிவு

நாளை மறுநாள் முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வரு வதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படை யெடுத்து வருகின்றனர். இதை தடுக்க பிற மாவட்ட எல்லைகளில் போலீஸார் குவிக்கப்பட்டு தீவிர சோதனை நடந்து வருகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கை யாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 82 நாட்களில் ஊர டங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்ததாக 5 லட்சத்து 97 ஆயி ரத்து 863 வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன. 6 லட்சத்து 45 ஆயிரத்து 233 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக் கப்பட்டுள்ளனர். 12 கோடியே 87 லட்சத்து 15 ஆயிரத்து 974 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வைரஸ் தொற்று அதிகமாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட் டங்களில் நாளை மறுநாள் முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் சென்னையில் இருந்து பலர், பல்வேறு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் முறையான அனு மதி இல்லாமல் செல்பவர்களை தடுக்க, மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சுங்கச்சாவடி களிலும் போலீஸார் குவிக்கப் பட்டு வாகன சோதனை நடத்தி, முறையான அனுமதி இல்லாதவர் கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

வருகிற 19-ம் தேதி முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இருந்து முறை யான அனுமதி இல்லாமல் பிற மாவட்டங்களுக்கு செல்பவர் களை பிடித்து தனிமைப்படுத் தவும், அவர்களுக்கு கரோனா பரி சோதனை செய்யவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT