செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில், பிறந்த குழந்தையை மாற்றி வழங்கியதாக புகார் எழுந்த தையடுத்து, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த முடிவில் பெற்றோர் திருப் தியடையவில்லை என்றால் மரபணு சோதனை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள பெருந் துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி பானுமதியை கடந்த 29-ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத் துவமனையின் சேர்த்தார். அதே நேரத்தில் செய் யாறு தாலுகாவைச் சேர்ந்த ரேவதி மற்றும் தாட்சாயணி ஆகியோரும் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். 3 பேருக்கும் அன்று இரவு 11 மணி முதல் 11.45 மணிக்குள் அடுத்தடுத்து 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளன.
இதில், பானுமதிக்கு சுகப் பிரச வத்தில் ஆண் குழந்தை பிறந்ததாக மருத்துவர்கள் அவரிடம் தெரி வித்துள்ளனர். மூச்சு திணறல் காரணமாக 3 குழந்தைகளும் இன்குபேட்டரில் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் மதியம் குழந் தைகளை பெற்றோர்களிடம் ஒப்ப டைத்தனர். அப்போது, ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்பட்ட பானுமதியிடம் பெண் குழந்தை வழங்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறி விட்டு தற்போது பெண் குழந் தையை வழங்குவதாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு குழந்தையை வாங்க மறுத்தார்.
இதுகுறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துராஜ், மருத்துவ கல்லூரி அதிகாரி கண்ணன் ஐசக் ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ‘தங்க ளுக்கு ஆண் குழந்தை பிறந்த தாக காண்பித்ததோடு, தாயின் கையிலும் குழந்தையின் கையி லும் 31-ம் எண் டோக்கன் கட்டப் பட்டிருந்தது. மருத்துவ சீட்டிலும் ஆண் குழந்தை என்றே குறிப் பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பெண் குழந்தையை கொடுக்கிறார்கள்’ என்று பானு மதியும் அவரது கணவர் ஆனந்த னும் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, தமிழ்நாடு மருத் துவ கல்வி அதிகாரி கீதாலட்சுமி உத்தரவின் பேரில், துணை மருத் துவ கல்வி இயக்குநர் லூத்ரவி செல்லையா விசாரணை நடத்தி னார். அடுத்தடுத்து பிறந்த 3 குழந்தைகளுக்கான தாயை கண் டறிய மரபணு பரிசோதனை நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, ஐதராபாத்தில் உள்ள மருத்துவ குழுவினரிடம் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, மரபணு சோதனை முடிவுகள் வர 6 மாதங்கள் வரை ஆகும் என தெரிந்தது. அதுவரை குழந்தையை யாருடைய கண்காணிப்பில் வைப்பது, பாலூட்டுவது போன்ற கேள்விகள் எழுந்தன. இதில் சட்டச் சிக்கல்களும் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து மரபணு சோதனை முடிவு கைவிடப்பட்டது.
ரத்த மாதிரி சோதனை நடத்தி குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து ரேவதி, தாட்சாயணி மற்றும் பானு மதி ஆகிய மூவரின் குழந்தை களுக்கும் சோதனை நடை பெற்றது. இதில், தாட்சாயணிக்கு பிறந்தது ஆண் குழந்தை என உறுதி செய்யப்பட்டு, குழந் தையை அவரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.
பின்னர் பெண் குழந்தைக்கும் ஆனந்தன்-பானுமதி தம்பதிக்கும் ரத்த மாதிரி சோதனை நடத்தப் பட்டது. இதில், 3 பேருக்கும் ‘ஓ பாசிட்டிவ்’ வகை ரத்தப் பிரிவு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் பானுமதிக்கு பிறந்தது பெண் குழந்தைதான் என மருத்துவர்கள் உறுதியளித்தனர்.
ஆனாலும், பானுமதி திருப்தி யடையவில்லை. இதனால் நேற்று மாலை 2 குழந்தைகள் மற்றும் ரேவதி, பானுமதி ஆகியோருக்கு மீண்டும் ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இதிலும், பானு மதிக்கு பெண் குழந்தை பிறந்தது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து, செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுப்புராஜ் கூறிய தாவது: மூத்த மருத்துவர்கள் முன் னிலையில் மீண்டும் நடத்தப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் பானுமதிக்கு பிறந்தது பெண் குழந்தைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவை பெற் றோர் ஏற்றுக்கொண்டால், குழந் தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும். மாறாக சந்தேகம் எழுப்பினால் மரபணு சோதனை செய்யப்படும். மனித தவறே இப்பிரச்சினைக்கு கார ணம். இது குறித்து துறைரீதியான விசாரணை நடத்தி தவறு செய் தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தற்போது ரத்தமாதிரி சோத னையின் அடிப்படையில் பெண் குழந்தையை ஏற்காவிட்டால் மரபணு சோதனை நடத்தப்படும். மருத்துவ அதிகாரிகள் அது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.