தமிழகம்

குமரியில் வீட்டு தனிமைப்படுத்தலில் 10 ஆயிரம் பேர்

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்னை, மற்றும் வெளியூர்களில் இருந்து வருவோரால் கரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.

மும்பை, சென்னை, மற்றும் வெளியூர்களில் இருநது வந்தவர்களை பரிசோதனை செய்ததில் நேற்று மட்டும் குமரியில் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்து.

இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 158 பேராக உயர்ந்துள்ளது. தற்போது 53 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்தோர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என 700 பேருக்கும் மேற்பட்டோர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். இதைபோல் வெளியூர்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்தவர்களில் 9300 பேர் வீட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

வெளியூர்களில் இருந்து போலி இ பாஸ், மற்றும் விதிமுறைகளை மீறி மாவட்டத்திற்குள் நுழைவோர் களியக்காவிளை, ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகள், மற்றும் சிறிய சோதனை சாவடிகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT