மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த வெங்கடேசன் எம்.பி., திமுக எம்.எல்.ஏ.க்கள் மூர்த்தி, சரவணன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தக் கோரி மதுரையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை மிகக் குறைவாகவே செய்யப்படுவதாக சு.வெங்க டேசன் எம்.பி. ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சு.வெங்கடேசன் எம்பி., எம்.எல்.ஏ.க்கள் பி.மூர்த்தி, பா.சரவணன் உட்பட பலர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

முன்னதாக எம்.பி. உள்ளிட்டோர் கூறியதாவது:

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரை மாவட்டத்துக்கு 20,000-க்கும் அதிகமானோர் வந்துள்ளனர். இவர் களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படவில்லை.

மேலும் மதுரை மக்களுக்கும் பெயரளவில் மட்டுமே பரிசோத னை நடக்கிறது. இதனால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் வாய்ப் புள்ளது.

இதைத் தவிர்க்க தினமும் 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்த வேண்டும். கரோனா ஒழிப்புப் பணியில் மேலும் வேகம் காட்ட வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT