விக்னேஷ் 
தமிழகம்

சென்னையிலிருந்து போலி இ-பாஸ் மூலம் காரில் பயணிகளை ஏற்றி வந்த டிராவல்ஸ் ஓட்டுநர் கைது

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம், களி யக்காவிளை, ஆரல்வாய் மொழி, அஞ்சு கிராமம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் போலீஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் சோத னையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்தினர் பொதுமக்களிடம் அதிக கட் டணம் பெற்று போலி இ-பாஸ் தயாரித்து அழைத்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 5 பயணிகளுடன் சென்னையில் இருந்து போலி இ-பாஸ் மூலம் காரில் வந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அஞ்சுகிராமம் சோதனை சாவடியில், போலீஸார் சோத னையில் ஈடுபட்டிருந்தபோது, சென்னையில் இருந்து ஒரு கார் வந்தது. அதில் 5 பேர் இருந் தனர். அவர்களது இ-பாஸ் சோதனை செய்யப்பட்டதில் அது போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து செங்கல்பட்டை சேர்ந்த கார் ஓட்டுநர் விக்னேஷ் (28) கைது செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT