சிவகங்கை மாவட்டத்தில் வெளிமாநிலம், சென்னையில் இருந்து வந்தவர்களால் கரோனா பாதிப்பு 100 தாண்டியது. மொத்தம் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர்.
இதில் சென்னையில் இருந்து வந்த மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 100 தாண்டியது. மொத்தம் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 59 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.