கரூரில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்கக் குவிந்த கூட்டத்தினால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அங்கு ஆற்று மீன்கள் கடல் மீன்களை விடவும் சுவையாக இருப்பதாகவும் விலையும் மலிவாக இருப்பதாக செய்திகள் பரவியதையடுத்து கரூர் மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி நாமக்கல், திருச்சி மாவட்ட எல்லைகளிலிருந்தும் மக்கள் கரூர் மீன் சந்தைக்கு வந்து செல்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பாக மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை, ஆனால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மீன்கள் வரத்து அதிகரித்தது.
இந்த மீன்களைப் பிடித்து அங்கேயே சுத்தம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை வாங்க மக்கள் குவிந்தனர். ஆனால் இவர்கள் முகக்கவசம் அணியவில்லை, சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை.
பொதுப்பணித்துறையினரும் போலீஸாரும் கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கவில்லை போல் தெரிகிறது. மீன்கள் வாங்க போதிய அங்காடிகள் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மக்கள் கூட்டத்தினால் தொற்று பரவும் அபாயம் அங்கு ஏற்பட்டுள்ளது.