தமிழகம்

எம்எல்ஏவின் மனைவி, மகள் உட்பட 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏவின் மனைவி, 8 வயது மகள் ஆகியோர் சளி- காய்ச்சலுடன் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, எம்எல்ஏ உட்பட குடும்பத்தினர் 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் கர்ப்பிணி, 2 குழந்தைகள் உட்பட 14 பேருக்கும், சென்னைக்கு கரோனா தடுப்புப் பணிக்கு சென்று திரும்பிய தஞ்சாவூர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளருக்கும் கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

துபாயிலிருந்து வந்த அம்மாபேட்டையைச் சேர்ந்த 54 வயதான நபர், கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

9 பேர் டிஸ்சார்ஜ்: திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று குணமடைந்த 4 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் குணமடைந்த 5 பேரும் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT