செக்கிழுத்த செம்மல், கப்பலோட் டிய தமிழர் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 144-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார் பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செய்தி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை செயலர் மூ.ராசாராம், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் கலந்துகொண்டு, வ.உ.சி. சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், சமக மாநில துணைத் தலைவர் எர்ணாவூர் நாராய ணன் எம்எல்ஏ, வ.உ.சி. குடும்பத்தை சேர்ந்த கலைச்செல்வி, மீனாட்சி சுந்தரி, வ.உ.சி. அறக்கட்டளைத் தலைவர் டி.எம்.ஜவஹர்லால், உழைக்கும் மக்கள் மாமன்றத் தலைவர் ஆர்.குசேலர் உள் ளிட்ட பலர் பங்கேற்று வ.உ.சி படத் துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் சுப்பு ஆறுமுகத் தின் வில்லுப்பாட்டு இடம்பெற்றது.