திமுகவில் கருணாநிதி குடும்பம் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
செயல்படுங்கள் முதல்வரே என்று உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திமுகவில் அப்பாவும், மகனும்தான் அரசியல் செய்கின்றனர்.
திமுகவில் அவர்களைத் தவிர தற்போது மூத்த தலைவர்களே இல்லையா?. உதயநிதி ஸ்டாலின் எல்லாம் கேள்வி கேட்கும் நிலைக்கு அந்த பாரம்பரிய கட்சி சென்றுவிட்டது என்று நினைக்கும்போது மனசு வருத்தமாக உள்ளது.
திமுகவில் கருணாநிதி குடும்பம் மட்டும் தான் அரசியல் செய்ய முடியும். அவரது குடும்பத்தை தவிர மற்ற அனைவரும் தமிழக முதல்வரின் செயல்பாடுகளை பாராட்டி வருகிறார்கள்.
மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். நிச்சயமாக அவரின் கருத்தை முதல்வரிடம் எடுத்துச்செல்வோம், ’’ என்றார்.