தமிழகம்

குர்பானிக்காக கொண்டு செல்லப்பட்ட மாடுகள் பறிமுதல்: தேசிய நெடுஞ்சாலையில் மறியல் - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

செய்திப்பிரிவு

குர்பானிக்காக கொண்டு செல்லப் பட்ட மாடுகளை பறிமுதல் செய்த போலீஸாரை கண்டித்தும், மாடு களை விடுவிக்க வலியுறுத்தியும் முஸ்லிம் அமைப்பினர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

பக்ரீத் பண்டிகையையொட்டி, சென்னையில் குர்பானி அளிப்பதற் காக புதுச்சேரியில் இருந்து, 2 லாரிகள் மூலம் 41 மாடுகள் சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டுவரப்பட்டன. அப் போது, பரனூர் சுங்கச்சாவடி அருகே கோசாலா என்ற அமைப் பினர் மாடுகளை ஏற்றி வந்த லாரிகளை மடக்கி பிடித்தனர்.

தகவல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸார், சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று மாடுகளை பறிமுதல் செய்தனர். கோசாலா அமைப்பினர் அளித்த புகாரின் பேரில், பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தகவல் அறிந்த முஸ்லிம் அமைப்பினர் மற்றும் மக்கள், மாடுகளை விடுவிக்கக் கோரி தாலுகா காவல் நிலை யத்தை நேற்று அதிகாலை முற்று கையிட்டனர்.

போலீஸார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத தால், மாடுகளை உடனடியாக விடுவிக் கக் கோரி, செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டனர்.

தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் கண்காணிப் பாளர் கிங்ஸ்லின், செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இத னால், தேசியநெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த வாக னங்கள் திண்டிவனம் அருகே மரக்காணம் வழியாக கிழக்கு கடற்கரை சாலைக்கு திருப்பி விடப்பட்டன. அதேபோல், சென் னையில் இருந்து செல்லும் வாக னங்களை, வண்டலூர் அருகே திருப்பிவிட்டனர்.

மறியலில் ஈடுபட்ட அனைவரும் தாலுகா காவல்நிலை யத்துக்கு சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் நீதி மன்றம் மூலம் மாடுகளை விடு விக்க முடியும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மாவட்ட அமர்வு நீதி மன்றம் எண் 2-ல் உடனடியாக வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா காந்தி, ஏராளமான மாடுகளை ஒரே வாகனத்தில் அடைத்து செல் லாமல் அதிக வாகனங்களை பயன் படுத்துமாறு அறிவுறுத்தி மாடுகளை விடுவித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் சுற்றுலா மாளிகை வளாகத்தில் கட்டப்பட்டிருந்த 4 மாடுகள் இறந்தன. இதற்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு தருவ தாக போலீஸார் கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT