கிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வேண் டு்ம் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியுறவு துறை அதிகாரிகளுக்கு நேற்றுமின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பிஉள்ளார். அதில் கூறியிருப்ப தாவது:
கரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 800 மாணவர்கள் பிஷ்கெக்கில் (கிர்கிஸ்தான்) சிக்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். பிஷ்கெக்கில் மருத்துவப் படிப்பைமுடித்த அவர்கள் தமிழகத்துக்கு திரும்ப முடியாததால் இந்தியாவில் மருத்துவர்களாக பயிற்சி பெறுவதற்கான தேர்வுகளை எழுத முடியாத நிலையில் உள்ளனர்.
தங்குமிடமின்றி அவதி
விடுதிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, அவர்களை அழைத்துவர பிஷ்கெக்கில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சென்னைக்கு சிறப்பு விமானங்களை இயக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.