கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிந்தால்,வீட்டில் தனிமைப்படுத்திக் கொள் ளும் வசதி இருந்தால், அவர்கள் தனிமை முகாம்களில் 14 நாட் கள் இருக்க தேவையில்லை என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார் பில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, லேசான அறிகுறி மற்றும் எந்த அறிகுறியும் இல்லாத 130 பேருக்கு சாலிகிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் குணமடைந்த 30 பேரை, அவர்களின் வீடுகளுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் சுகாதாரத் துறை செயலரும், மாநகராட்சி கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வீட்டில் வசதி இருந்தால்...
கரோனா பரிசோதனை செய்துகொள்வோர், அவர்களது குடும்பத்தினர் அனைவரும் 14 நாட்கள் தனிமை முகாம்களில் இருக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார். ஒருவரை பரிசோதனை செய்து,முடிவு வரும் வரை, அவர் தொற்றுஉடையவராக இருந்தால் பலருக்கு கரோனா வைரஸைபரப்புவார். அதைத் தடுக்கஇவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருவருக்கு பரிசோதனை முடிவில் தொற்று இல்லை எனவந்துவிட்டாலும், அவருக்கு அறிகுறி இருந்தால் கட்டாயம் 14 நாட்கள் தனிமை முகாம்களில் இருக்க வேண்டும். பரிசோதனையில் தொற்று இல்லை என தெரியவந்து, அவருக்கு அறிகுறி இல்லாத நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதி இருந்தால், 14 நாட்கள் தனிமை முகாம்களில் இருக்க தேவையில்லை.
கண்ணகி நகர், சுனாமி நகர்பகுதிகளில் தொற்று பரவியபோது, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி, கை கழுவுதல் போன்றவற்றை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியதால், அங்குகரோனா தொற்று கட்டுக்குள்வந்துவிட்டது.
சென்னையில் 39 ஆயிரத்து 537 தெருக்கள் உள்ளன. அதில்5 ஆயிரத்து 210 தெருக்களில் தான் தொற்று உள்ளது. இப்பகுதிகளிலும் அரசின் அறிவுரைகளை மக்கள் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பரிசோதனைக்கு பொதுமக்களை அழைத்துவர, மருத்துவமனைகளுக்கு செல்லவசதியாக, வெளி மாவட்டங்களில் இருந்து 173 ஆம்புலன்ஸ்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.