தமிழகம்

நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் முழங்காலிட்டு சூடம் ஏற்றி போராட்டம்: 32 பேர் கைது

அ.அருள்தாசன்

தமிழகத்தில் இந்து கோயில்களைத் திறக்க வலியுறுத்தி திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில்முன் இந்து மக்கள் கட்சி சார்பில் முழங்காலிட்டு சூடம் ஏற்றி நூதன போராட்டம் நடத்தினர் .

இதில் ஈடுபட்ட10 பெண்கள் உட்பட 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோயில்களையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்க வேண்டும் என பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயில்முன் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் முழங்காலிட்டு சூடம் ஏற்றினர். இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் எஸ். உடையார் தலைமை வகித்தார்.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரோனா அச்சத்தால் தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 20-ம் தேதி கோயில்கள் மூடப்பட்டன. இந்நிலையில் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவித்தும், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டும் தமிழகத்தில் இன்னும் திறக்கப்படாததற்கு எதிர்ப்புக் குரல் கிளம்பி வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோயில்களையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்க வேண்டும் என இந்து அமைப்புகள் போராடி வருகின்றன. மாவட்டந்தோறும் போராட்டங்கள் நடக்கிறது. அந்த வரிசையில் இன்று நெல்லையிலும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சிறு குழந்தைகளும் கூட பங்கேற்றது சர்ச்சையைக் கிளப்பியது.

SCROLL FOR NEXT