தமிழகம்

மருந்து தயாரிப்பு மட்டும் போதாதது; வணிக உத்தியும் தேவை:  மன்சுக் மண்டாவியா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் (NIPERs) இயக்குநர்களுடன் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் மன்சுக் மண்டாவியா ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

மொஹாலி, ஹாஜிப்பூர் மற்றும் கவுகாத்தியில் உள்ள தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் (NIPERs) இயக்குநர்களுடன் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தலைமையில் ஆய்வுக் கூட்டம் ஒன்று காணொலிக் காட்சி மூலம் இன்று நடைபெற்றது.

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில், குறிப்பாக கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான நாட்டின் போரில் தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செய்துள்ள மற்றும் செய்யக்கூடியவற்றை ஆய்வு செய்வதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மண்டாவியா, ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளின் மூலம் தங்களது சொந்த வளங்களை உருவாக்கி, தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் சுயசார்போடு திகழலாம் என்று தெரிவித்தார்.

பொருள்களின் தயாரிப்போடு மட்டும் நின்று விடாமல், அவற்றை வணிகப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வருவாயை உருவாக்குவதற்காக தேசிய அளவிலான பரிசோதனை ஆய்வகங்களை அமைக்க அனைத்து தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் முயற்சி செய்ய வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார். பரிசோதனைக் கூடங்களை வணிக முறையில் பயன்படுத்திக் கொள்ள அரசு மற்றும் தனியார் துறை மருந்து நிறுவனங்கள் தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை அணுகலாம்.

SCROLL FOR NEXT