தமிழகம்

எஸ்எஸ்எல்சி சிறப்பு துணைத்தேர்வு: நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

செய்திப்பிரிவு

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் 10-ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டன. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 20-ம் தேதி வரை மட்டுமே செல்லத்தக்கது ஆகும்

இந்த நிலையில், தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்து தேர்வர்களுக்கும் நாளை (புதன்கிழமை) முதல் 9-ம் தேதி வரை, அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களில் அலுவலக நேரத்தில், (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) வழங்கப்படும். 9-ம் தேதிக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங் களில் அசல் மதிப்பெண் சான்றிதழ் களை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT