சென்னையிலிருந்து கோவில்பட்டிக்கு ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்ட இளைஞர் உடலுக்கு அதிகாரிகள் முன்னிலையில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
கோவில்பட்டி சீனிவாச நகரைச் சேர்ந்த ஜான்சன் மகன் பிரதீப் ராக் (29). இவர் திண்டுக்கல்லில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட பிரதீப் ராக் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் பிரதீப் ராக் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் உரிய அனுமதி பெற்று அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டிக்கு இன்று கொண்டு வந்தனர். கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச் சாவடியில், ஆம்புலன்ஸை போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் சோதனையிட்டனர்.
பின்னர் அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், பிரதீப் ராக்கின் உடலை உறவினர்கள் நேரடியாக மயானத்துக்கு கொண்டு சென்று, அதிகாரிகள் முன்னிலையில் இறுதிச் சடங்குகளை செய்தனர்.
மேலும், ஆம்புலன்ஸில் வந்த அவரது உறவினர்கள் 4 பேரை தனிமைப்படுத்தி வைத்தனர்.