தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே திம்மரச நாயக்கனூர், பிள்ளைமுகன்பட்டி. பொம்மி நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங் களில் விவசாயம் பிரதானமாக இருந்தாலும், கால்நடை வளர்ப்பு தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு உற்பத்தியாகும் பால் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தேனி ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது.
ஆனால், கரோனா ஊரடங்கால் கடந்த 2 மாதமாக பால் கொள்முதல் விலையை குறைத்து விட்டதாகக் கூறி விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
திம்மரசநாயக்கனூரில் பாலை கீழே கொட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், பாலுக்கு லிட் டருக்கு ரூ.31-ல் இருந்து ரூ.27 ஆக குறைத்து வழங்குகின்றனர். மேலும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து குறைந்த விலைக்கு பால் வாங்கிக் கொண்டு நாங்கள் அனுப்பும் பாலை திருப்பி அனுப் புகின்றனர் என்றனர்.