தமிழகம்

இலகு ரக போர் விமானம் தயாரிக்கும் 6 நாடுகளில் இந்தியாவும் இடம்பெறும்: ராணுவ அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் தகவல்

செய்திப்பிரிவு

இன்னும் சில ஆண்டுகளில் இலகு ரக போர் விமானங்களைத் தயாரிக்கும் 6 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெறும் என மத்திய ராணுவத் துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் சதீஷ்ரெட்டி கூறினார்.

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் ‘கிராவிடாஸ்-15’ நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். மத்திய ராணுவத் துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் சதீஷ்ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது, ‘‘இந்தியாவின் தற்போதைய இறக்குமதி 60 சதவீதமாக உள்ளது. இது 10 முதல் 15 சதவீதமாக குறைய வேண்டும். இங்குள்ள ஆராய்ச்சி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை தனி யாகவோ அல்லது அயல்நாட்டு ஒத்துழைப்புடனோ கண்டுபிடிக்க வேண்டும். இந்தியாவில் பாது காப்பு மற்றும் விண்வெளி துறைகளில் சிறுதொழில் மூலம் உதிரிபாகங்கள் தியாரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் பிரித்திவி ஏவுகணை செலுத்தியதில் இருந்து, பல ஏவுகணைகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் நூற்றுக்கணக்கான ஏவுகணை களை இந்தியா வெற்றிகரமாக செலுத்தும். அடுத்த சில ஆண்டுகளில் இலகு ரக போர் விமானங்களை தயாரிக்கும் 6 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும். மத்திய பட்ஜெட்டில் 0.85 சதவீதம் ஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.

விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசும்போது, ‘‘ஆராய்ச்சிக்காக மத்திய அரசு 0.85 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இஸ்ரேல் நாட்டில் 4.2 சதவீதமும், அமெரிக்காவில் 2.85 சதவீதம் ஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆராய்ச்சியில் திறமைமிக்க கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டு, அந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT