மணிகண்டன் 
தமிழகம்

பிஹாரில் கும்பலால் கொலையுண்ட ராணுவ வீரர் உடல் சொந்த ஊர் வருகை

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலை அடுத்த குருந்தன்கோடு வீரவிளையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). துணை ராணுவத்தின் 19-வது பட்டாலியன் வீரரான இவர், பிஹார் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 7-ல் இவர், அங்கு நாக்கா என்ற இடத்திலுள்ள சோதனைச்சாவடியில் பணியிலிருந்தபோது அவ்வழியாக மாடுகளை கடத்திச் சென்ற வாகனத்தை மறித்து சக வீரர்களுடன் சேர்ந்து சோதனை செய்தார்.

அப்போது, மாடு கடத்தும் கும்பல் தாக்கியதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் கடந்த 5-ம் தேதி இரவு உயிரிழந்தார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான வீரவிளைக்குக் கொண்டு வரப்பட்டது. ராணுவ மரியாதையுடன் இன்று உடல் அடக்கம் செய்யப்படுகிறது. மணிகண்டனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

SCROLL FOR NEXT