கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்கிறது. குளச்சலில் நேற்று அதிகபட்சமாக 76 மி.மீ. இரணியல் 44, கோழிப்போர்விளை 20, குருந்தன்கோடு 24, முள்ளங்கினாவிளையில் 33 மி.மீ., மழை பதிவானது.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர். கோதையாறு, குழித்துறை தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 38.80 அடியாக உயர்ந்துள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 48.60 அடியை எட்டியுள்ளது. சிற்றாறு ஒன்றில் 14.59 அடி, சிற்றாறு இரண்டில் 14.69 அடி தண்ணீர் உள்ளது. முதல்வர் அறிவித்தபடி கன்னிப்பூ சாகுபடிக்காக இன்று (ஜூன் 8) காலை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.