சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர், தான் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப் பது தெரியாமல் புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது உயிரிழந்தார்.
அவரது உடலை அடக்கம் செய்ய கோபாலன்கடை மயானத் துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு கவச உடை அணிந்த பணியாளர்கள் நால்வர், ஆம்பு லன்ஸில் இருந்து உடலை தூக்கி வந்தனர். குழிக்குள் சடலத்தை கயிறு கட்டி இறக்காமல், தள்ளி விட்டு திரும்பினர். கரோனா தொற்று பாதித்தவரின் உடலை அலட்சியமாக சவக்குழியில் வீசி விட்டுச் செல்வதாக வீடியோக்கள் இணையத்தில் பரவின.
தொடர்ந்து இவ்விவகாரம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “நாங்கள் விசாரித்த வகையில், தூக்கிச் சென்ற ஊழியர் ஒருவரின் கை நழுவியதால் உடல் குழியில் விழுந்துவிட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக வில்லி யனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் சுகாதாரத் துறை இயக்குநர் விளக்கம் கோரி யுள்ளார்” என்று குறிப்பிட்டனர்.
மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலர் சுகுமாரன் கூறுகையில், “கரோனாவால் இறந்தோரின் உடல்களை கையாள்வது தொடர் பாக மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அது அப்பட்ட மாக மீறப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையோர் மீது உரிய நடவடிக்கை தேவை. இதுகு றித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் அனுப்பி யுள்ளோம்” என்று தெரிவித்தார்.