அழகிய கொற்றவை சிற்பம். 
தமிழகம்

பாண்டியர் கால கொற்றவை சிற்பம் ராஜபாளையம் அருகே கண்டெடுப்பு

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம், ராஜபா ளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் போ. கந்தசாமி கூறியது:

மாங்குடிக்கு அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் ஆவுடையாபுரம் பகுதியில் கருப் பையா என்பவரின் நிலத்தை உழுது கொண்டிருந்தனர். அப்போது சுமார் 6 அடி உயர கொற்றவை சிற்பம் கண் டெடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்திலேயே முதன் முதலாக மான் வாகனத்தைத் கொண்ட கொற்றவை சிற்பம் இது. தற்போது சென்னை அரசு அருங் காட்சியகத்தில் இந்த சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. வடஇந்தியாவில் சிங்கம் அல்லது புலியை வாகனமாக கொண்டுதான் கொற் றவை சிற்பங்கள் உள்ளன.

ஆனால் தமிழகத்தில் கொற்ற வையின் வாகனமாக கலைமான் உள்ள சிற்பம் அரிதானது. இதன் உருவ அமைப்பைக் கொண்டு பார்க்கையில், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கலைநயமிக்க சிற்பமாகக் கருதப்படுகிறது என்றார்.

SCROLL FOR NEXT