வேலூரில் ரவுடி மகா கொலை வழக்கில் 6 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். இதையடுத்து வேலூரில் பதற்றத்தை கட்டுப்படுத்த எஸ்பி தலைமையில் 400 போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள தாரகேஸ்வரர் கோயில் சிறப்பு பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்க அதிமுக பிரமுகரும், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரு மான ஜி.ஜி.ரவி அங்கு வந்தார். அவருடன் அவரது மகன்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர் கள் பூஜையில் பங்கேற்றனர்.
இந்நிலையில், முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி மகா (எ) மகாலிங்கம் தனது கூட்டாளிகள் குப்பன் உட்பட 3 பேருடன் கோயில் விழாவில் கூட்டத்தோடு கூட்டமாக பக்தர்கள் போல் வேடமணிந்து உள்ளே புகுந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ஜி.ஜி.ரவியை பின்தொடர்ந்து வந்த ரவுடி மகா, திடீரென அவரை அரிவாளால் வெட்டினாராம்.
இதைக்கண்ட ரவியின் ஆதரவாளர்கள் மகாவை சுற்றிவளைத்து தாக்கினர். இதனால் மகா, உயிரை காப்பாற்றிக்கொள்ள காட்பாடி - வேலூர் சாலையில் ஓடினார். அப்போது ரவியின் மகன்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் சேர்ந்து மகாவை மடக்கி இரும்பு கம்பியாலும், கைகளாலும் தாக்கினர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மகாவின் தலை மீது பெரிய கல்லைப் போட்டு கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மகாவின் கூட்டாளிகள் தப்பிச்சென்றனர். வேலூரில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தை கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தோட்டப்பாளையம் பகுதி யில் உள்ள கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன.
தகவல் அறிந்ததும் வேலூர் எஸ்பி செந்தில்குமாரி, வேலூர் டிஎஸ்பி ராஜேந்திரன் (பொறுப்பு), போலீஸார் சம்பவ இடத் துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மகா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜி.ஜி.ரவி வேலூர் தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். நகரில் பதற்றம் ஏற்பட்டதால் 400 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மகா கொலை வழக்கில் ஜி.ஜி.ரவியின் மகன்கள் தமிழ்மணி (20), கோகுல் (24), ஜி.ஜி.ரவியின் தம்பி செல்வத்தின் மகன்கள் ரஞ்சித் (20), கார்த்தி (18), சஞ்சீவ் (17), உறவினர் சிலம்பரசன் (28) ஆகிய 6 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
யார் இந்த மகா?
வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த அரிபாண்டுரங்கன் என்பவரின் மகன் மகா (எ) மகாலிங் கம் (36). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 5 கொலை வழக்குகள், ஆள்கடத்தல், வழிப் பறி, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை வழக்கு தொடர்பாக கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி மகா நிபந்தனை ஜாமீனில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியே வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜி.ஜி.ரவியின் தம்பி ஜி.ஜி.ரமேஷ் கொலை செய்யப்பட்ட பின்னர், ஜி.ஜி.ரவிக்கும், ரவுடி மகாவுக்கு விரோதம் அதிகரித்த தால் இந்த கொலை நடந்துள்ளது.