கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது.அந்த மாநிலத்தையொட்டி உள்ள தமிழகத்தின் கன்னியாகுமரியிலும் மழை பெய்து வருகிறது.
நேற்று மிதமான மழை பெய்தது.பேச்சிப்பாறை அணைக்கு விநா டிக்கு 711 கன அடி தண்ணீர் வரு கிறது. நீர்மட்டம் 37.50 அடியாக உயர்ந்துள்ளது. பெருஞ்சாணி அணைக்கு 442 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 44.75 அடியாக உயர்ந்துள்ளது. நாகர் கோவிலுக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை 2.5 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் மழை யால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரையைத் தொட்டவாறு தண்ணீர் பெருக் கெடுத்து ஓடு கிறது. மழை நீடிக்கும் என்பதால் கரையோரப் பகுதி மக்களுக்கு நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.