கரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டணத் தொகையை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை ரயில் கோட்டம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் வரும் 30-ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்களுக்கான கட்டணத் தொகையை எந்தவித பிடித்தமும் இல்லாமல் பயணிகளுக்குத் திருப்பித் தர ரயில்வே வாரியம்உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னைகோட்டத்துக்குட்பட்ட சென்ட்ரல்,எழும்பூர், கடற்கரை, மயிலாப்பூர், பரங்கிமலை, மாம்பலம்,தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாலாஜா, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய முன்பதிவு மையங்களில் இன்று (ஜூன் 5) முதல் கட்டணத்தை திரும்பப் பெறலாம்.