சிவகங்கை அரசு மருத்துவமனையில் குணமடைந்தவர்களை வழியனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன். அருகில் மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல். 
தமிழகம்

சிவகங்கையில் மேலும் ஒருவருக்குக் கரோனா: 4 பேர் குணமடைந்தனர்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கிடையே கரோனா தொற்றில் இருந்து 4 பேர் குணமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வந்த 22 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதுதவிர சென்னையில் பணிபுரியும் காளையார்கோவிலைச் சேர்ந்த தீயணைப்பு வீரர், புதுக்கோட்டையில் பணிபுரியும் காரைக்குடியைச் சேர்ந்த உளவுப் பிரிவுக் காவலருக்கும் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து வந்த திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தைச் சேர்ந்த 28 வயது ஆணுக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் ஏற்கனவே 15 பேர் குணமடைந்த நிலையில் மேலும் 4 பேர் குணமடைந்தனர்.

அவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார். மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனாள், முகமது ரபீக், கண்காணிப்பாளர் ஷீலா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

          
SCROLL FOR NEXT