அரியலூர் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி கலந்துகொண்டு 250 தூய்மைப் பணியாளர்களுக்கு பூத்தூவி மரியாதை செய்ததுடன், அவர்களுக்கு சொந்த செலவில் அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தக் கூடாது. மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பதால், பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்.
சென்னையில் அதிக அளவில் கரோனா தொற்று கண்டறியப்படுவதால் சென்னை மாநகரத்தை தனிமைப்படுத்தி அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.