ராமேசுவரத்தில் அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது வெண்கலச் சிலையை அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கலாம் மாணவ சமுதாயத்துக்காக நன்மை செய்த வர். ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் பேசும்போது மாரடைப் பால் இறந்த அப்துல் கலாமின் உடல் ராமேசுவரம் பேக்கரும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கலாமின் உடல் அடக்கம் செய் யப்பட்ட இடத்தில் அவரது வெண் கலச் சிலையை அமைக்கவும், மாண வர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அப்துல் கலாம் பெயரில் ராமேசுவரத்தில் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் மனுதார ரின் கோரிக்கை தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும். எனவே, மனுதார் 11.8.2015-ம் தேதி அனுப்பிய மனுவைப் பரிசீலித்து தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.