தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 94 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களில் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், இன்று மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
இன்று புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் சங்கரன்கோவில், கோமதியாபுரத்தைச் சேர்ந்த 40 வயது ஆண், ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளத்தைச் சேர்ந்த 26 வயது ஆண் ஆவர்.
இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் என்று சுகாதாரத் துறையினர் கூறினர்.