தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 277 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் மொத்தம் 226 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 277 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் தென்திருப்பேரை பகுதியில் அதிகமானவர்களுக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 10 பேர் இன்று காலை குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.