தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 90 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 72 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இன்று மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இருந்து வந்த கடையம் அருகே உள்ள இடைகால் பகுதியைச் சேர்ந்த ஒருவர், சென்னையில் இருந்து வந்த பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், சென்னையில் இருந்து வந்த ராஜபாண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல், தென்காசியில் ஒரே குடும்பத்தில் பாட்டி, பேரன், பேத்தி என 3 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அந்த குடும்பத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தந்தைக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.