தமிழகம்

காணொலிக் காட்சியில் வழக்குகளை விசாரிக்காமல் வழக்கறிஞர்களை நீதிமன்றத்தில் நேரில் அனுமதித்து விசாரிக்க வேண்டும்- பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

காணொலிக் காட்சி வாயிலாக வழக்குகளை விசாரிப்பது முழுமையாக தோல்வியடைந்துள்ளதால், நீதிமன்றங்களில் வழக்கறிஞர் களை நேரில் அனுமதித்து வழக்கமான நடைமுறையில் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வலியுறுத்தியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரண மாக உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மட்டும் வழக்கமான நடைமுறை யில் வழக்கறிஞர்களை நீதிமன்றங் களில் நேரில் ஆஜராக அனுமதித்து விசாரணை நடத்தலாம் என்றும், சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் காணொலிக் காட்சி வாயிலாக விசாரணை நடைபெறும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் மற்றும் பார் கவுன்சில் நிர்வாகிகள் கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற் கொண்டனர். இதுகுறித்து பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல் ராஜ் கூறியதாவது:

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேஷன் உள்ளிட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான வழக்கறி ஞர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தா லோசிக்கப்பட்டது.

காணொலிக் காட்சி வாயிலாக வழக்குகளை விசாரிப்பது என்பது முழுமையாக தோல்வியடைந்துள்ளது. மிகமிக குறைந்த எண்ணிக்கையிலேயே காணொலிக் காட்சி வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டுள் ளன.

எனவே, எப்படி உயர் நீதிமன்ற மதுரை கிளை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களை நேரில் அனுமதித்து விசாரணை நடைபெறுகிறதோ அதேபோல, சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் வழக்குகளை வழக்கமான நடைமுறையில் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு வலியுறுத்தியுள்ளோம். இது தொடர்பாக உயர் நீதிமன்ற நிர்வாகக் குழுவிடமும் கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம். எனவே காணொலிக் காட்சி மூலமாக விசாரணையை நடத்தாமல் குறைந்த எண்ணிக்கையில் வழக்குகளை பட்டியலிட்டு வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் நேரில் ஆஜராக அனுமதித்து, சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வழக்கு களை விசாரிக்க வேண்டும் என்பதே எங்களின் அழுத்தமான கோரிக்கை என்றார்.

மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சென்னை உயர் நீதிமன்ற வழக்க றிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT