தமிழகத்தில் இறுதி ஊர்வலங்கள், சடங்குகளில் 20 பேர் வரை பங்கேற்கலாம் என்று இருந்ததை, 50 பேர் வரை பங்கேற்க அனுமதித்துஅரசாணை வெளியிடப்பட்டுள் ளது.
தமிழகத்தில் 5வது கட்டமாக ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர மற்றமாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு்ள்ளன.
மத்திய அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி தமிழக அரசுஅளித்துள்ள தளர்வுகள் குறித்துமுதல்வர் வெளியிட்ட அறிக்கையில், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 50 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம். இறுதிச் சடங்கு,இறுதி ஊர்வலத்தில் 20 பேருக்கு மிகாமல் பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக நேற்று கூறப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், இறுதிச்சடங்கு மற்றும் இறுதி ஊர்வலத்திலும் 50 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.