தமிழகம்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

தற்கால தரவுகள் படி தென்மேற்குப் பருவ மழை வழக்கமாகத் தொடங்கும் நாள் ஜூன் 1 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவ மழை தாமதமாகத் தொடங்குகிறதா அல்லது முன்னதாகவே தொடங்குகிறதா என முடிவாகிறது.

2014-ம் ஆண்டில் ஜூன் 6, 2015-ல் ஜூன் 5, 2016-ல் ஜூன் 8, 2017-ல் மே 30, 2018-ல் மே 29-ல் பருவ மழை தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூன் 8-ல் தொடங்கும் என கணித்தநிலையில் ஜூன் 6-ல் தொடங்கியது.

இந்த ஆண்டு ஜூன் 5-ல் தொடங்கும் என்ற நிலையில் இன்று (ஜூன் 1) தொடங்குகிறது. அதன் அறிகுறியாக தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ் வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுப்பெற உள்ள நிலையில், கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதியில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறி வித்துள்ளது.

SCROLL FOR NEXT