கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (34). இவர், அதே பகுதியில் சொந்தமாக ஒர்க் ஷாப் வைத்துள்ளார். 15 நாட்க ளுக்கு முன்னர், சுரேஷ் தனது இரு சக்கர வாகனத்தை ஒர்க் ஷாப் முன்பு நிறுத்திச் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, வாகனத்தை காண வில்லை. மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சூலூர் போலீஸார் விசாரித்து வந்தனர்.
மேலும், அதே பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை சுரேஷ்குமார் ஆய்வு செய்தபோது, சூலூரில் உள்ள தேநீர் கடையில் பணி புரிந்து வந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த பிரசாந்த் (35) திருடிச் சென்றது தெரிந்தது.
இந்நிலையில், சூலூரில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தினர், பார்சல் வந்துள்ளதாக சுரேஷை அழைத்துள்ளனர்.
அப்போது, திருடுபோன தனது இருசக்கர வாகனத்தை, திருடிச் சென்ற அந்த நபர் பார்சல் மூலமாக திருப்பி அனுப்பி யிருந்தது தெரிந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சுரேஷ், கட்டணத்தை செலுத்திவிட்டு, வாகனத்தை எடுத்துச் சென்றார்.
ஊரடங்கு நேரத்தில் பொது போக்குவரத்து இல்லாததால், சுரேஷின் இருசக்கர வாகனத்தை திருடி, அதன் மூலம் சொந்த ஊருக்கு பிரசாந்த் சென்றிருக் கலாம் எனவும், போலீஸார் விசாரிப்பதை அறிந்து, ஆர்.சி.புத்தகத்தில் உள்ள முகவரிக்கு பார்சல் நிறுவனம் மூல மாக வாகனத்தை திருப்பி அனுப்பி இருக்கலாம் எனவும் தெரியவருகிறது.