தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளி யிட்டதாக திமுக மாவட்டப் பொறுப்பாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள சிங்கையன்புதூர் கிராமம் வழியாக ஜல்லிக்கற்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதாகக் கூறி, திமுக கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் (59) தலைமையில் கடந்த 26-ம் தேதி லாரிகளைச் சிறைப் பிடித்துப் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த் (27) சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அவற்றில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகம் அளித்த புகாரின்பேரில், கிணத்துக்கடவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வால்பாறையில் தங்கியிருந்த கீர்த்தி ஆனந்தை கைது செய்தனர். ஆழியாறு வனச் சோதனைச் சாவடி அருகே அவரை அழைத்து வந்தபோது, தென்றல் செல்வராஜ் தலைமை யிலான திமுகவினர் போலீஸாரின் வாகனத்தை தடுத்து நிறுத்தி, போராட்டத் தில் ஈடுபட்டனர். மேலும், கீர்த்தி ஆனந்தை யும் விடுவித்து, அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து ஆழியாறு காவல் நிலையத்தில், கிணத்துக்கடவு போலீ ஸார் புகார் அளித்தனர். போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து, விசாரணைக் கைதியை அழைத்துச் சென்றதாக தென்றல் செல்வராஜ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து அவரையும், கீர்த்தி ஆனந்தையும் கைது செய்த போலீஸார், பொள்ளாச்சியில் நீதிபதி முன்னிலை யில் இருவரையும் ஆஜர்படுத்தி, கோபி சிறைக்கு கொண்டு சென்றனர்.
திருப்பூரில் திமுக நிர்வாகி கைது
திருப்பூர் வீரபாண்டி புளியங்காடு பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஆர்.பாண்டியராஜன், வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், திமுக திருப்பூர் வட்டார தொழில் நுட்பப் பிரிவு அணி ஒருங்கிணைப்பாளர் ஏ.ரஞ்சித் (24), அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து சமூக வலைதளங் களில் அவதூறு கருத்துகளைப் பரப்பிய தாக தெரிவித்திருந்தார். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், ரஞ்சித்தை கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.