திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே 10 பேர் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவ ரும் சென்னையில் இருந்து திருச்சி திரும்பியவர்கள்.
இதனிடையே, திருச்சி மாநகராட்சி ஊழியர் உட்பட 4 பேருக்கு கரோனா தொற்று இருப் பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் செவிலியருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவ மனை வட்டாரங்கள் கூறும் போது, “அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய பெண் செவிலியர் உடல் நலக் குறைவால் அவதிப் பட்டதால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து, அவரு டன் பணியில் இருந்த பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் இருவர் உட்பட 5-க்கும் அதிக மான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவு றுத்தியுள்ளோம்” என்றனர்.
மேலும், பெண் செவிலியருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத் திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஜிப்மர் மருத்துவருக்கு தொற்று
புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் மோகன்குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் ஜிப்மர் மருத்து வர் உட்பட மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. புதுச் சேரியில் ஊரடங்கு தளர்வுகள் செய்யப்பட்டாலும் கரோனா கட்டுக்குள் வர இன்னும் பல நாட்களாகும் என்பதால் தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பயிற்சி மருத்துவருக்கு...
இதேபோல, கடலூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவமனையிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட் டுள்ளார். மேலும், மகாராஷ்டிரா வில் இருந்து சிறப்பு ரயிலில் வந்த வர்களில் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
முகக்கவசம் தவிர்க்கும் பொதுமக்கள்
புதுச்சேரியில் கடந்த மே 18-ம் தேதி ஊரடங்கு தளர்வு அதிகரித்தது முதல் சாலைகளில் மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. தொடக்கத்தில் பல கடைகளில் கிருமிநாசினி வைக்கும் பழக்கம் கட்டாயமாக இருந்தது. தற்போது பல கடைகளில், வங்கிகளில், ஏடிஎம்களில் கிருமிநாசினி வைக்கப்படுவதில்லை.
பழைய பேருந்து நிலைய உழவர் சந்தை, இசிஆர் மீன் மார்க்கெட் வளாக காய்கறி சந்தை மற்றும் பல்வேறு இடங்களில் விற்பனையாளர்கள் முகக்கவசம் அணியும் பழக்கத்தையே விட்டுவிட்டனர். சாலைகளிலும் முகக்கவசம் இல்லாமல் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, கண்காணிப்பு மற்றும் அபராதம் விதிப்பதை கடுமையாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.