சென்னையில் இருந்து மற்ற மாவட் டத்துக்கு செல்வோர் கட்டயமாக கரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள் ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளு டன் 5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், வைரஸ் தொற்று பரி சோதனை மற்றும் தனிமைப்படுத் தலுக்கு கூடுதல் நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது.
அந்த அரசாணையில், “மண்டலத் துக்குள் பயணம் செய்பவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை. ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண் டலத்துக்கு பயணம் செல்பவர்களில் அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்ய வேண்டும். வைரஸ் தொற்று அதிகமுள்ள மகா ராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கண்டிப்பாக பரி சோதனை செய்ய வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் வருபவர்கள் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும்.
மண்டலத்துக்குள் பைக், கார், பேருந்து, ரயிலில் பயணம் செய்பவர் களுக்கு இ-பாஸ் தேவையில்லை. வெளிமாநிலங்களில் இருந்து வருப வர்களுக்கு அறிகுறி இல்லை என்றா லும் பரிசோதனை செய்ய வேண்டும்.
சென்னையில் இருந்து மற்ற மாவட் டங்களுக்கு செல்பவர்கள் கட்டாய மாக கரோனா வைரஸ் பரி சோதனை செய்து கொள்ள வேண்டும். பரி சோதனையில் வைரஸ் தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று வந்தா லும், வீடுகளில் 7 நாட்கள் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும். சென் னையில் இருந்து பிற மாவட்டங் களுக்கு வேலை நிமித்தமாக சென்று விட்டு 48 மணி நேரத்தில் திரும்புபவர் களுக்கு பரிசோதனை தேவை யில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.