ரயிலில் பயணம் செல்ல இ.பாஸ் பெற வேண்டுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி என 4 வழித்தடங்களில் 8 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவுப்படி, வெளிமாநிலங்களுக்கோ அல் லது வேறு மண்டல பகுதி களுக்கோ செல்ல இ.பாஸ் பெற வேண்டுமென தெரிவித்துள்ளது.
அந்த வகையில், ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர், தமிழக அரசிடம், இணையதளம் மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து இ.பாஸ் பெற வேண்டியது அவசியம் என்று தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.