தமிழகம்

தூத்துக்குடியில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று: 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதுபோல மேலும் 10 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் மொத்தம் 216 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 10 பேர் இன்று காலை குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT