தமிழகம்

தென்காசியில் 2 குழந்தைகளுக்கு கரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 88 ஆக அதிகரிப்பு

த.அசோக் குமார்

தென்காசி மாவட்டத்தில் 2 குழந்தைகளுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி, புதுமனை 1-ம் தெருவைச் சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கு நேற்று முன்தினம் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

இதில், அந்த மூதாட்டியின் இரண்டரை வயது பேரன், ஒன்றரை வயது பேத்தி ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த குழந்தைகள் 2 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT