தமிழகம்

தலையில் தேங்காய் உடைக்கும் சடங்குக்கு தடை விதிக்க முடியாது- உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி 18-ம் தேதி நடைபெறும் ஆடித் திருவிழாவில் பக்தர்களின் தலையில் கோயில் பூசாரி தேங்காய் உடைக்கும் சடங்கு நடைபெறும். இந்த நிகழ்வுக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப் பித்த உத்தரவு: பக்தர்கள் விரும்பித்தான் இந்த நேர்த்திக் கடன்களை நிறைவேற்று கின்றனர். எந்தவொரு மத நம்பிக்கையிலும், வழிபாட்டு முறைகளிலும் நீதிமன்றம் தலையிட்டு தொந்தரவு ஏற்படுத்த முடியாது. மத உணர்வுகளை புண்படுத்துவது தண்டிக்கக்கூடிய குற்றமாகும். எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT