டாஸ்மாக் வசூல் பணமான ரூ.80 லட்சத்தை கொள்ளையடித்தவர் கள் வந்த வாகனத்தை கண் காணிப்பு கேமரா மூலம் போலீஸார் கண்டுபிடித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தை தனியார் ஏஜென்ஸியினர் வசூலித்து சென்னையில் டாஸ்மாக் மேலா ளரிடம் ஒப்படைப்பார்கள். நேற்று முன்தினம் இப்படி வசூலான பணத்தை எடுத்துவரும்போது நீலாங்கரை அருகே ஒரு டாஸ்மாக் கடையில் வைத்து காரில் இருந்த ரூ.80 லட்சம் பணத்தையும் ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
இது குறித்து தனியார் ஏஜென் ஸியை சேர்ந்த ஜெயசீலன் (42) பார்த்திபன் (37), திருமுருகன் (57) ஆகியோர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். நீலாங்கரை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அடையாறு துணை ஆணையர் கண்ணன், நீலாங்கரை உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர்கள் தினகரன், பாஸ்கர் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலாங்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனைச்சாவடிகள், சுங்கச் சாவடி மற்றும் முக்கிய இடங் களில் பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து முதற் கட்ட விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது. இதில், கொள்ளையர்கள் வந்த காரின் அடையாளத்தை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அதை வைத்து கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளை நடந்தபோது வாக னத்தை ஓட்டிய ஜெயசீலன், உட னிருந்த முருகன் ஆகியோர் வேலைக்கு சேர்ந்து 2 மாதங் கள்தான் ஆகின்றன. இவர்களிட மும், பார்த்திபனிடமும் விசாரணை நடக்கிறது. மேலும் ஏற்கெனவே இந்த ஏஜென்சியில் வேலை செய்துவிட்டு நின்றவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களிடமும் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். கொள்ளை நடந்த வாகனத்தில் பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு அதை வைத்தும் குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது.