ஆரல்வாய்மொழியில் மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
தமிழகம்

ஆரல்வாய்மொழியில் மணல் கொள்ளை: 6 வாகனங்கள் பறிமுதல்

எல்.மோகன்

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மலையடிவாரப் பகுதிகளில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருவதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை போலீஸார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது லாரி, டெம்போக்களில் மண் கடத்தி செல்வதும், இந்த வாகனங்களின் முன்னாலும், பின்னாலும் மோட்டார் சைக்கிளில் பல இளைஞர்கள் செல்வதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மணல் கடத்தி சென்ற ஒரு லாரி, 4 டெம்போ, ஒரு பொக்லைன், 7 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

மணல் கடத்தலில் ஈடுபுட்ட 15 பேரை பிடித்து விசாரித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தொடர் மணல் கொள்ளையில் தொடர்புடைய அப்பகுதியை சேர்ந்தவர்களை போலீஸார் தேடி வருகினறனர்.

SCROLL FOR NEXT