படம்: மு.லெட்சுமி அருண் 
தமிழகம்

நெல்லை மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிற இடங்களிலும் மழை நீடிப்பு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிற இடங்களிலும் மழை நீடித்தது.

மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 62 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பிறஇடங்களில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்)

பாபநாசம்- 3, சேர்வலாறு-1, மணிமுத்தாறு- 5, அம்பாசமுத்திரம்- 4, பாளையங்கோட்டை- 32.40, திருநெல்வேலி- 27.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 36.70 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 120 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 72.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 78 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 425 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றும் பிற்பகல் தொடங்கி இடியுடன் மழை பெய்து வருகிறது.

SCROLL FOR NEXT