வரும் 31-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொலி காட்சி வழியாக நடைபெறும் என அக்கட்சி தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (மே 29) வெளியிட்ட அறிவிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 31 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம், காணொலி காட்சி வழியாக நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டை மத்திய அரசு மறுத்து வருவது குறித்தும், கரோனா நோய் தடுப்பில் மத்திய, மாநில அரசின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.