தமிழகம்

அமைச்சுப் பணியாளர்களுக்கு போலீஸார் சல்யூட் அடிக்க தடை- பெரம்பலூர் எஸ்.பி உத்தரவு

செய்திப்பிரிவு

மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு போலீஸார் சல்யூட் அடிக்க தடை விதித்து பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள ஒரு சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு வருகை தரும் காவலர்கள், அங்கு பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு சல்யூட் அடிப்பது சீருடை விதிகளுக்கு எதிரானது. அப்படி யாராவது அமைச்சுப் பணியாளர் களுக்கு சல்யூட் அடித்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையினருக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் என்னிடம் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ தெரிவிக்கலாம். மேலும், காவல் துறையினர் அமைச்சுப்பணியாளர்களை சந்திப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் உள் அலு வலக விவகார உத்தரவுகள் வழக்கமாக வாய்மொழியாகவே பிறப்பிக்கப்படும். ஆனால் தற் போது அலுவலக உள் விவ காரம் தொடர்பாக எழுத்து மூலம் பெரம்பலூர் எஸ்.பி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT